இலங்கை இராணுவ புலனாய்வு கடமைப்புக்களை பயன்படுத்தி மீண்டும் சதி முயற்சிகளை முன்னெடுக்க முற்பட்டதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமளித்துள்ளார்.
கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் அமைச்சரும் கோத்தபாயவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவை கைது செய்வதற்கான முயற்சிகள் மும்முரமடைந்துள்ளது.
மீண்டுமொரு இராணுவ சதிப்புரட்சி பற்றிய சந்தேகத்தில் இலங்கை இராணுவ புலனாய்வு பணிப்பாளர் அண்மையில் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருந்தார்.
அதே போன்று கோத்தபாயவின் சகாகக்களான பல படை அதிகாரிகள் பதவிகளிலிருந்து தூக்கியடிக்கப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதனிடையே இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய கோத்தபாய பின்புற கதவின் ஊடாக ஊடகங்களில் கண்களில் அகப்படாதவாறு சென்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.