கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை ! on Friday, January 17, 2025
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து வினவியபோது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர கூறியதாவது: பிரச்சினைக்குரிய இரு குழுக்களையும் பரீட்சைத் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள மதிப்பீட்டு நிலையத்திற்கு அழைத்து, அங்கிருந்து விடைத்தாள் மதிப்பீட்டை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் கவுன் அணிந்து வந்ததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
நேற்று (16) பாடசாலை நாள் என்பதால், சேலை அணிய வேண்டியிருந்தாலும், அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலையின் அதிபர் அவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.