ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹினோ மோட்டார்ஸ்!

by wp_shnn

டொயோட்டா துணை நிறுவனமான ஹினோ மோட்டார்ஸ் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (£1.3bn) செலுத்த ஒப்புக்கொண்டது.

மேலும், அதன் டீசல் என்ஜின்களால் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகளின் அளவு குறித்து அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களை ஏமாற்றியதற்காகன குற்றத்தையும் ஹினோ ஒப்புக்கொண்டது.

இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், டிரக் நிறுவனம் தனது டீசல் என்ஜின்களை அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும்.

2010 தொடக்கம் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில் அமெரிக்காவில் 105,000 சட்டவிரோத என்ஜின்களை விற்று மோசடி செய்ததாக மிச்சிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகர நீதிமன்றத்தில் ஹினோ மீது குற்றம் சாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்