நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம் !

by wp_fhdn

நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம் ! on Friday, January 17, 2025

ஹிக்கடுவ கடற்கரையில் நீராடச் சென்ற கனேடிய பிரஜை ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று மாலை நீராடச் சென்ற ஒருவரே நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயது கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வெளிநாட்டவர் நீச்சலுக்கு சென்ற இடத்தில் இருந்த எச்சரிக்கை பலகைகளை கவனிக்காமல் கடலில் நீந்திச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல்போன நபரைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையின் உயிர்காக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்