துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது !

by wp_fhdn

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது ! on Friday, January 17, 2025

வெல்லம்பிட்டிய – மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 13 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, நீதிமன்ற அனுமதியைச் பெற்று சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக வெல்லம்பிட்டிய பொலிஸார் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முற்பகல் வெலிகந்த பொலிஸ் பிரிவில் ருஹூணுகெத பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைதான நபரிடமிருந்து T56 ரக துப்பாக்கியுடன் தோட்டா பை மற்றும் T56 தோட்டாக்கள் 18 உம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ருஹூணுகெத, வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடை சிவில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா அல்லது வேறேனும் குற்றச் செயல்களுக்காக குறித்த துப்பாக்கியை பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்