7
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காயமடைந்தவர்களில் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பேருந்தில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்