அம்பாறையில் மழையால் வயல் நிலங்கள் நாசம் அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்து விடப்பட்ட நிலையில் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் வியாழக்கிழமை (16) காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதுடன் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது.இம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்கள் வயல் நிலங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளன. சவளக்கடை, அன்னமலை, வேப்பையடி, 5ஆம் கொலனி , போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்