மோடி முதலில்: அடுத்து சீன ஜனாதிபதி?

by wp_shnn

இந்திய பிரதமரை இலங்கைக்கு வருகை தர அழைப்பு விடுத்துள்ள அனுர அரசு அடுத்து சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதியை சந்திந்திருந்தார். சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு உக்குவிப்பு, சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் இறுதியில் சீன ஜனாதிபதியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்திருந்ததாகவும் அழைப்பை சீன ஜனாதிபதி அன்புடன் ஏற்றுக்கொண்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை வெள்ளிக்கிழமை தமது சீன பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்ப உள்ளார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமரை வரவேற்க அரசு தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்