மது போதையில் தகராறு ; ஒருவர் கொ லை !

by wp_fhdn

மது போதையில் தகராறு ; ஒருவர் கொ லை ! on Thursday, January 16, 2025

ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரமெட்டிய பிரதேசத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.

சம்பவத்தன்று கொலை செய்யப்பட்டவர் மேலும் சில நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரை அடித்துக் காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்