0
மட்டக்களப்பு இலங்கை திறந்த பல்கலைக்கழக பிராந்திய நிலையத்தில் மனித வள முகாமைத்துவத்தில் உயர் சான்றிதழ் பதிவுக்குத் தவறவிட்ட மாணவர்களுக்கான உடனடிப் பதிவு on Thursday, January 16, 2025
(சித்தா)
மனித வள முகாமைத்துவத்தில் உயர் சான்றிதழ் படிப்பிற்கு பதிவு செய்வதற்குத் தவறவிட்ட மாணவர்களுக்கு எதிர்வரும் 17.01.2025 ஆம் திகதி மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான உடனடிப் பதிவு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே பதிவை மேற்கொள்ள ஆர்வமுள்ளோர் குறித்த திகதியில் இரு பாஸ்போட் அளவிலான புகைப்படம், பிறப்புச் சான்றிதழ் (மூலப் பிரதி, நகல் பிரதி) க.பொ.சாதாரணப் பரீட்சை முடிவு (மூலப் பிரதி, நகல் பிரதி) மற்றும் தேசிய அடையாள அட்டை (மூலப் பிரதி, நகல்பிரதி) போன்ற ஆவணங்களுடன் சமூகம் கொடுத்து பதிவுகளை மேற்கொள்ள முடியும்.