1
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் நாளை (17) பருத்தித்துறை கடலில் கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். நாளை (17) காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.