யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் முதியவர்கள் இருவரிடம் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பெருந்தொகை பணத்தினை களவாடியுள்ளது.
உடுத்துறை பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு , தனியார் தொலைத்தொடர்பு சேவை ஒன்றின் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி அவரது தொலைபேசி இலக்கத்திற்கு வந்த வங்கியின் கடவுச்சொற்களை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்ச ரூபாய் பணத்தினை களவாடியுள்ளனர்.
அதேபோன்று முதியவர் ஒருவரிடமும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட நபர்கள் , அவருக்கும் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் பெருந்தொகை பணம் கிடைத்துள்ளதாக கூறி வங்கி தகவல்களை பெற்றதுடன் , வங்கியில் இருந்து தொலைபேசிக்கு வந்த கடவுச்சொற்களையும் பெற்று அவரின் வங்கி கணக்கில் இருந்து 29 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தினை களவாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தொலைபேசி இலக்கத்திற்கு வரும் வங்கியின் கடவுச்சொற்களை (OTP) இலக்கங்களை வேறு நபர்களுக்கு பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்