போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர் கைது !

by 9vbzz1

போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர் கைது ! on Thursday, January 16, 2025

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட மற்றும் தர்மபால வீதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூதாட்டி உட்பட இருவர் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 10 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைதானவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்