4
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி. ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டாலர்கள் முதல் 2,700 டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கலை மற்றும் அரசியலை இணைக்கும் இந்த பீங்கான் சிலைகள், உலகெங்கிலும் உள்ள சிலை சேகரிப்பாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன.
999 முதல் 20,000 யுவான்களுக்கு அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி. இந்த சிலைகள் அமேஸான் மற்றும் சீன இணையதள விற்பனை நிறுவனமான டெழுவில் விற்பனைக்கு உள்ளன.