போலிவுட் நடிகர் சயீப் அலி கான் (Saif Ali Khan) மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை (16) நடந்த திருட்டு முயற்சியின் போது 6 முறை கத்தியால் குத்தப்பட்டார்.
கான் தற்போது மும்பையின் லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்த கத்தி குத்து சம்பவத்தின் பின்னர், சயீப் அலி கான் அதிகாலை 3.30 மணியளவில் லீலாவதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
54 வயதான நடிகருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில், சயீஃப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் கான் குழுவினர், கத்திக்குத்து தாக்குதலுக்குப் பின்னர் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளனர்.
அந்த அறிக்கையில், கரீனாவும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
அதேநேரம், இது பொலிஸ் விவகாரம் என்பதனால் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பொறுமையாக இருக்குமாறு அவரது குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
இதனிடையே சம்பவம் தொடர்பில் மும்பை பாந்த்ரா பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முழுமையான விசாரணை நடந்து வருகிறது.
நடிகருக்கும் ஊடுருவிய நபருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், சயீஃப் அலிகான் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார்.
இறுதியில் வீட்டில் இருந்த அனைவரும் விழித்தெழுந்ததால், கொள்ளையன் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சைஃப் அலி கான் அவரது மனைவி கரீனா கபூர் கான் அவர்களது குழந்தைகளான ஜெஹ் மற்றும் தைமூர் ஆகியோர் புத்தாண்டு விடுமுறைக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த வாரம் மும்பைக்கு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.