உக்ரேனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கையெழுத்திடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இச் சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சமாக உக்ரேன்-பிரித்தானியா இடையே நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் பிரித்தானிய பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கையெழுத்திடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 100 ஆண்டு கால ஒப்பந்தமானது உக்ரேனுடனான பிரித்தானியாவின் வலுவான ஆதரவை உறுதிப்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் ஒப்பந்தம் தொடர்பான அரசியல் பிரகடனம் வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரேனை அதன் கூட்டாளிகளிடம் இருந்து பிரித்தெடுக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் திட்டங்கள் தோல்வியடைந்து இருப்பதாகவும், உக்ரேன் மற்றும் அதன் கூட்டாளிகளின் நட்புறவு முன்பை விட தற்போது வலுவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.