by smngrx01

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு! சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ஷ ஆகியோரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலீ லங்காபுர இன்று புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தொடர்பில் நாமல் குமார மற்றும் அசேல நுவான் ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்