by adminDev

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு சந்தேக நபர்களிடம் விசாரணை சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதிகளில் வீட்டில்  மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு இரு வேறு சந்தர்ப்பங்களில் கைதான 2  சந்தேக நபர்கள்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விற்பனை செய்வதற்காக அதிகளவான கசிப்பு கலன்களுடன் கடந்த திங்கட்கிழமை (13)   45 மற்றும் 69 வயதுடைய இரு சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இரு சந்தேக நபர்கள் வசம் இருந்து 23000 மில்லி லீற்றர் கசிப்பு தொகுதிகளை சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.

இதன்போது குறித்த கைதான 2 சந்தேக நபர்களும்  நீண்ட காலமாக கசிப்பு  விற்பனையில்  ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள்  உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை  நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்