1
வீடொன்றின் மீது அதிகாலையில் துப்பாக்கி பிரயோகம் ! on Wednesday, January 15, 2025
தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் ஜன்னல் மீது 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் விசேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தொடங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.