தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, “வல்வை பட்டத் திருவிழா – 2025” வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் “உயிர்த்தெழும் ராகன்” பட்டம் முதலாமிடத்தையும், “மின் பிறப்பாக்கி பட்டம்” இரண்டாம் இடத்தினையும் , “ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு” பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.