தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது!

by wp_shnn

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்ய புலனாய்வாளர்களின் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: arrestedPresidentSouthKoreanupdatsworld

தொடர்புடைய செய்திகள்