2
on Wednesday, January 15, 2025
(வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் 75 ஆவது வருட பவள விழா பிறந்த நாள் நிகழ்வுகள், பொங்கல் மற்றும் கேக் வெட்டலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இந் நிகழ்வு இன்று (15) புதன்கிழமை அதிபர் ம. சுந்தரராஜன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகள் பலரும் கலந்து கொண்டதுடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பழைய மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் 75ம் ஆண்டு நிறைவு பவளவிழாவினை (1950-2025) சிறப்பிக்கும் வகையில் நிகழ்வுகள் பல தொடர்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.