அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் ஒரு வீரர் பலி – என்ன நடந்தது? (காணொளி)

காணொளிக் குறிப்பு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் ஒரு வீரர் பலி – என்ன நடந்தது? (காணொளி)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த ஜல்லிக்கட்டில் தற்போது வரை 41 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மாடு குத்தியதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மதுரையை சேர்ந்த மாடுபுடி வீரர் நவீன் குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

மேலும் இரண்டாவது சுற்றில் காளை குத்தியதில் இடுப்பில் காயமடைந்த மாடு பிடி வீரர் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கூடுதல் தகவல்கள் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.