சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.
முன்னதாக இந்தியா பயணித்து இந்திய பிரதமரை சந்தித்திருந்த நிலையில் தற்போது சீன ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இதனிடையே தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல்வளங்களை சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்;.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை. யுத்தத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்தகட்டமாக என்ன செய்ய முடியும் எனவும் சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரோலர் படகுகள் மற்றும் சுருக்கு வலைகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அதனையே தொடர்ச்சியாக பயன்படுத்துகின்றனர்.
தமிழக முதல்வரிடம் நாம் கோருவது ஒன்றுதான். ரோலர் படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முறையை தடை செய்ய வேண்டும். இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடைசெய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல்வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்.” எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.