5
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, நீண்ட சாட்சிய விசாரணைக்கு பிறகு விசாரணையை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்
Related
Tags: lkanewsPrisonupdatsVele Sudha