சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2,137 சங்குகளுடன் ஒருவர் கைது !

by admin

on Wednesday, January 15, 2025

புத்தளம், கற்பிட்டி, பராமுனை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2,137 சங்குகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து மீன்பிடி படகு மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 2,137 சங்குகள் (15 மூடைகள்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்