3
நீராடச்சென்ற இளைஞர் நீரில் மீழ்கி மாயம் ! on Tuesday, January 14, 2025
மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மீழ்கி காணாமல் போயுள்ளதாக மடு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நபர் ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் மடு பொலிஸார் இராணுவத்தினரின் உதவியைப் பெற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.