3
சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி ! on Tuesday, January 14, 2025
வீட்டில் வழமையான செயற்பாட்டில் ஈடுபட்ட வேளையில், மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் நேற்று (13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவு சென்னக்கிராமம் பகுதி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.