by smngrx01

நவகமுவ பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கொரதொட்ட பிரதேசத்தில் ஐஸ் மற்றும்  ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தெக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (13 ) நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் தனது வீட்டிற்கு அருகில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது நவகமுவ பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து   04 கிலோ 300 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 792 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 120,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்