நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எத்துகால பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞனும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 35 கிலோ 565 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.