by admin

துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா உடல் நலக் குறைவு காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கைதியின் சிகிச்சை தொடர்பில் 18 விசேட வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவினர் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய கைதிக்கு சிறைச்சாலை வைத்தியசாலை அல்லது வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இல்லை எனினும் திடீர் ஒவ்வாமைகள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதிக்குமாறும் தெரிவித்திருந்தனர். அதற்கமைய இம்மாதம் 10 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மெகசின் சிறைச்சாலையில் உள்ள பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

எனினும் திடீரென ஏற்பட்ட சிக்கல் நிலைமை காரணமாக மறுநாள் சனிக்கிழமை அன்று அதிகாலை 2.00 மணிக்கு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வா சிகிச்சை பெற்றுக் கொண்டதன் பின்னர் மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறை கைதிக்கு மேலதிக சிகிச்சைகளை வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமையால் எதிர்வரும் 15 திகதியன்று இடமாற்றம் செய்யப்படுவதுக் குறித்து அறிவிக்கப்படும் என சிறைச்சாலை வைத்தியசாலையின் தலைமை மருத்துவ நிபுணர் அறிவித்துள்ளார் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமிணி பி. திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்