வடக்கு உட்பட 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள்!

by smngrx01

Tuesday, January 14, 2025 இலங்கை

போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் போலி வைத்தியர்கள் சிலர் கடமையாற்றுகின்றார்கள். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவத்துறை மகத்தானது. போலி வேடம் தயாரித்து எவரும் மருத்துவத்துறைக்குள் உள்நுழைய முடியாது. மக்களின் உயிருடன் விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது.” – என்றார்.

Post a Comment

தொடர்புடைய செய்திகள்