2
தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது.
அதேபோல் காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,500 பொலிஸாரட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.