தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றவர்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு !

by guasw2

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றவர்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு ! on Monday, January 13, 2025

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6000/=ரூபாய் பெறுமதியான 70
பார்வையற்றவர்களுக்கான பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வு 11.01.2025 அன்று சங்கத்தின் தலைவர் ப. டிசாந்தன் தலைமையில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் இடம்பெற்றது.

70 பொதிகளுக்கான நிதியினை லண்டன் நாட்டில் வசிப்பவர்களான கலையரசன் அவரது நண்பர்கள் மற்றும் பத்மநாதன் அனுஷன் அவரது ஏற்பாட்டில் இந்திரன், புத்தாடைகளை நிருவாக உத்தியோகத்தர் சரணியா கிஷோகாந் அவர்களது ஏற்பாட்டில் கனடா மற்றும் லண்டன் நாட்டில் வசிக்கும் அவர்களது உறவுகள், நண்பர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக விஸ்வப் பிரம்மஸ்ரீ. கிருபைரெத்தினம் சர்வேஸ்வரன் (பிரதம குரு. ஆரையம்பதி ஸ்ரீ வட பத்திரகாளி அம்மன் ஆலயம்) பிரதம விருந்தினராக திரு.நா. தனஞ்சயன் (மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர்) சிறப்பு விருந்தினராக பேராசிரியர். திருமதி. சாந்தி கேசவன் (முன்னைனாள் இந்து நாகரிகத் துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம்)

கௌரவ விருந்தினர்களாக திரு. பத்மநாதன் அனுஷன் ( ஊடகவியலாளர், சமூக சேவையாளர்) மற்றும் திருமதி. சசியந்தினி ரவிச்சந்திரன் (இணைப்பாளர், உழைக்கும் மகளிர் அமைப்பு) மற்றும் சங்கத்தின் ஆலோசகர்களான திரு.ஐ.பகலவன், திரு.த.நேசதுரை, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. சரணியா கிஷோகாந், பயனாளிகள் அனைவரும் கலந்து சிறப்பித்ததுடன் இந்நிகழ்வை திறன்பட சிறப்பாக ஒழுங்குபடுத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ப.சுபராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்