பிரான்சில் எலோடி கேப்பே என்ற பெண் காட்டுப் பன்றிக் குட்டி ஒன்று குப்பைத் தொட்டி இருந்த அழுகிய காய்கறிகளைச் சுற்றி வந்தபோது குதிரை வளர்க்கும் பெண் அந்த பன்றிக்குட்டியைத் எடுத்து லில்லெட் என பெயரிட்டு வளர்த்து வந்தாள்.
குறித்த பெண் வீட்டில் மிஞ்சும் கழிவு உணவுகளை அந்த பன்றிக்கு உணவாக அளித்து வருகிறாள். அப்பன்றி அவளின் குடும்பத்தின் அங்கமாக இப்போது இருக்கிறது.
அந்தப் பன்றி தற்போது மிகவும் பிரபலமடைந்துவிட்டது. உலகம் முழுவதும் நூறாயிரக்கணக்கான அன்பானவர்கள் குறித்த பன்றியை பின்தொடர்கின்றனர்.
பிரான்சில் வளர்க்கப்படாத விலங்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது. குறித்த காட்டுப் பன்றியால் வளர்ப்பவருக்கு நோய் அபாயம் இருகிறது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக்கூறி அதன் அடிப்படையில் குறித்த பன்றி கருணை அடிப்படையில் கொல்லப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ரில்லெட் என்ற பன்றியைக் காப்பாற்றுவதற்காக கையெழுத்துப் போராட்டத்தை நடிகையும் விலங்கு உரிமை ஆர்வலருமான பிரிஜிட் பார்டோட் தொடக்கி வைத்தார். இதுவரை மனுவில் 187,000 க்கும் மேற்பட்டடோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில் உதவி! ரில்லெட்டை காப்பாற்ற வேண்டும் என்று நான் கோருகிறேன். என்ன அரக்கர்கள் அவளது கருணைக்கொலையை கேட்கிறார்கள்?…இந்த சிறிய விலங்குக்கு வாழ உரிமை உண்டு, அது ஒரு கடமையும் கூட, அவள் அப்பாவி” , ” கருணைக்கொலை ஒரு குற்றம்! நாங்கள் கொலைகாரர்களால் ஆளப்படுகிறோம்!” என்று ஆன்லைனில் வெளியிடப்பட்ட கையால் எழுதப்பட்ட குறிப்பில் பார்டோட் ஆவேசப்பட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 500 பேர் சௌர்ஸில் பொது சுகாதார அதிகாரிகள் தங்கள் வழிக்கு வருவதைத் தடுப்பதற்காக மௌன அணிவகுப்பு நடத்தினர்.
கேப்பே பன்றிக்குட்டியைக் கண்டுபிடித்தபோது, அதை விலங்குகள் சரணாலயங்கள் மற்றும் பூங்காக்களில் ஒப்படைக்க முயன்றதாகவும் ஆனால் அவர்கள் அதை எடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறினாள்.
பன்றிக் காய்ச்சல் மற்றும் மாட்டு காசநோய் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இந்தச் சட்டம் அத்தகைய விலங்குகளை பராமரிப்பதில் உள்ள உடல்நல அபாயங்களால் நியாயப்படுத்தப்படுகிறது… பண்ணைகள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது” என்று உள்ளூர் வழக்கறிஞர் கூறினார்.
டிசம்பரின் பிற்பகுதியில், விலங்குகளை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திடம் விலங்கை ஒப்படைக்குமாறு கேப்பிற்கு உத்தரவிடப்பட்டது. நிதி ஆதாயத்திற்காக ரில்லெட்டை அங்கு அனுப்ப விரும்புவது வெட்கக்கேடானது என்று மறுத்துவிட்டார்.
நீதிமன்றம் இந்தவாரம் தீர்ப்பு வழங்கவுள்ளது. கேப்பே மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் €150,000 அபராதமும் விதிக்கபடலாம். அத்துடன் பன்றியன் நிலைமையும் ஆபத்தாக உள்ளது.