on Monday, January 13, 2025
சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்று 15 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்ட ‘கடாபி’ எனப்படும் நபர், பல குற்றச்செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2010ல் சிறைப் பேருந்தின் தரைப் பலகையை அகற்றிவிட்டு தப்பிச் சென்றதற்காக கடாபி என்கிற உபேகா சந்திரகுப்தா தேடப்பட்டு வந்தார்.
15 வருடங்களின் பின்னர் அண்மையில் பிலியந்தலை மாம்பே பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபர் சிறைச்சாலை பேருந்தில் இருந்து தப்பிச் சென்றதை ஒப்புக்கொண்டார், அதேவேளை அவர் நாட்டில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டது.
2010ஆம் ஆண்டு கெஸ்பேவ பிரதேச அபிவிருத்தி வங்கியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபராக விசாரணைகளின் மூலம் இவர் அடையாளம் காணப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு பாணந்துறை மேல் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவர் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அந்த நபர் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு திரும்பி வந்து பல பகுதிகளில் தலைமறைவாக இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மாம்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.