by sakana1

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள்  ஒருவர் வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் தங்க நகைகளை கொள்ளையிடுவதாக ஹங்வெல்ல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, தும்மோதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்