சட்டவிரோத மதுபானங்களை பிடிப்பதற்காக மீனவர் ஒருவருக்குச் சொந்தமான தோணியில் சென்ற நான்கு பொலிஸார் வாவிக்குள் விழுந்துள்ளனர். இந்த சம்பவம், அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
ஏரியைக் கடக்க தோணியில் சென்ற அம்பாறை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு அதிகாரிகள் கவிழ்ந்து நீரில் விழுந்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வசமிருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் கொண்ட ஒரு மேகசின் ஏரியில் விழுந்துள்ளனர்.
கொனாடுவட்டுவன குளத்தின் மறுபுறத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உதய குமார உட்பட நான்கு அதிகாரிகள் இந்த சோதனையில் பங்கேற்றனர்.
ஒரு மீனவர் படகில் அக்கரைக்கு பயணித்துகொண்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில், அந்த நால்வரும் வாவிக்குள் விழுந்துள்ளனர்.
இருப்பினும், துப்பாக்கி மற்றும் ரவைகளை கண்டுபிடிக்க அம்பாறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.