by guasw2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்களுடன் சந்திப்பு இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான, ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்   சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  (மார்க்சிஸ்ட்)  தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பொன்னாடை அணிவித்து,  நூல்களை வழங்கி வரவேற்றார். அமைச்சர், பிரதியமைச்சர் இருவரும் மலையக பகுதியை சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நடைபெற்ற உரையாடலில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது முன்னெழும் பிரச்சனைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்