’எமது கடலில் வெளிநாட்டவர்கள் ட்ரோன் விடுகின்றனர்’ வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டைமனாறு கடற்கரையில் நின்று ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள். அதே போல் முல்லைத்தீவில் றோகிஞ்சியா படகு கரையொதுங்கும் வரை கடற்படைக்குத் தெரியாது போயுள்ளது. இவ்வாறு வெளிநாட்டவர் எமது கடலில் என்ன செய்கிறார்கள் என்று அவதானிக்க முடியாதவர்கள் பிறகு கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசி பிரியோசனமில்லை என்று வடமராட்சி வடக்கு சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பில் நா.வர்ணகுலசிங்கம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கடற்பரப்பில் இடம்பெறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கிருக்கும் உள்ளூர் சங்கங்கள் ஏன் வெளி மாவட்ட மீனவர்களுக்கு ஒரு நடைமுறையையும் உள்ளூர் மீனவர்களுக்கு ஒரு நடைமுறையும் கொண்டுள்ளீர்கள்.
வெளி மாவட்ட மீனவர்கள், சட்ட விரோத தொழில் முறைகள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்களால் கடல்வளம் அழிக்கப்படுகிறது. நாசம் செய்யப்படுகிறது. கடல் பகுதிகளில் பிளாஸ்ரிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு கடல்வளம் நாசமாகப்பட்டுள்ளது. இதைக் கிளீன் செய்யுங்கள் கிளீன் சிறீலங்கா என்றால் இதைக் கிளீன் செய்யுங்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன் வெளிநாட்டு பிரஜைகள் சிலர் தொண்டைமனாறு கடற்கரையில் நின்று ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கிறார்கள். அதே போல் முல்லைத்தீவில் றோகிஞ்சியா படகு கரையொதுங்கும் வரை கடற்படைக்குத் தெரியாது போயுள்ளது. இவ்வாறு வெளிநாட்டவர் எமது கடலில் என்ன செய்கிறார்கள் என்று அவதானிக்க முடியாதவர்கள் பிறகு கிளீன் சிறீலங்கா பற்றிப் பேசி பிரியோசனமில்லை