1
நாடளாவிய ரீதியில் ஒன்பது இடங்களில் சனிக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட அதிவிசேட சோதனை நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் ஆகியவற்றை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து மொத்தமாக 178 கிராம் 997 மில்லிகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில், 135 கிராம் 3320 மில்லிகிராம் (138 கிராம் 32 மில்லிகிராம்) ஐஸ் போதைப்பொருளும், 40 கிராம் 965 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் அடங்கும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ராஜகிரிய, தலங்கம, மோதரவில, பாணந்துறை, கல்கிஸை, அஹுங்கல்ல, தெமட்டகொட உள்ளிட்ட பிரதேசங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.