1
வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய கண்ணனும் ராதையும்
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த மரச்செதுக்கல் சிலை ஒன்று வத்திராயன் கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.
மட்டி பொறுக்குவதற்காக வத்திராயன் வடக்கு கடற்கரைக்கு மீனவர்கள் சிலர் சென்றிருந்த வேளை ஆள் உருவில் உருவம் ஒன்று காணப்பட்டுள்ளது.
அதனை மீட்ட போது குறித்த உருவம் மரத்தில் செதுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட கண்ணன்-ராதா சிற்பமாக காட்சியளித்துள்ளது.
இந்தோனேசியா, மியான்மார், இந்தியா ஆகிய நடொன்றில் இருந்து வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.