சீனா செல்லும் ஜனாதிபதி – 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

by guasw2

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்கிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு 14ஆம் திகதி நாளைய தினம் செய்வாய்க்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையில் முதலீடு, மின்துறை, மீன்பிடி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பிரதான துறைகளை உள்ளடக்கிய வகையில் 7 ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கைக்கும் – சீனாவுக்கும்; இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் அமையும். 

இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு சீனா என்றும் தயாராகவே உள்ளது. நேர்மை, பரஸ்பர ஆதரவு மற்றும் நிலையான நட்புறவை உள்ளடக்கிய இலங்கையின் மூலோபாய கூட்டுறவு பங்பாளித்துவம் ஆகியவற்றால் இரு நாட்டு மக்களுக்கும் அதிக பயன் கிடைக்கும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியததின் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மீட்சிக்கு சீனாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பின்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான உத்தியோகபூர்வ நான்கு நாள் அரசமுறை விஜயத்தை நாளைய தினம் செவ்வாய்கிழமை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்