கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!

by sakana1

கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, ​​கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்