பிகிராடோவுக்கு சி.ஐ.டி அவசர அழைப்பு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஞாயிற்றுக்கிழமை(12) கையளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கடந்த 09 ஆம் திகதி செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் 15ம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது.
மன்னார் கோந்தை பிட்டியில் அமைந்துள்ள குற்ற விசாரணை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் குறித்த அழைப்புக்கடிதத்ததை கையளித்துள்ளனர்.
மன்னாரில் உள்ள அவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (12) காலை சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,அவர் வீட்டில் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று குறித்த கடிதத்தை கையளித்தனர்.