by smngrx01

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம் யாழ் போதனா வைத்தியசாலை என்புமுறிவு விடுதிகள் (Ward 14 மற்றும் 17)  புதிய கட்டிடத்தொகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னதாக மருத்துவ கட்டிடத்தொகுதியில் செயல்பட்டு வந்த என்புமுறிவு சத்திரசிகிச்சை விடுதிகள், தற்போது நவீன வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய விடுதிகளில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மிகவும் இலகுவாக சிகிச்சை பெற முடியும்.

மற்றும் என்புமுறிவு நோயாளிகளை பார்வையிட வருவோர், வைத்தியசாலையின் நுழைவாயில் இலக்கம் 2A என குறிப்பிடப்பட்டுள்ள வழியாக வைத்தியசாலைக்குள் நுழையமுடியும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டடத்தொகுதியின் வலதுபுறத்தில் அமைந்துள்ள மின் தூக்கி (elevator) மூலம் மேலே சென்று, குறித்த விடுதிகளில் உள்ள நோயாளியை பார்வையிடலாம்.

ஒரு நோயாளியை பார்வையிட, பார்வையிடும் நேரங்களில் ஒரே நேரத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவுறுத்தலுக்கு இணங்க நோயாளிகளை பார்வையிட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்