by smngrx01

அதிக விலையில் அரிசி விற்ற இரு கடைகள் சிக்கின தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள்   திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்டிருந்தனர்.

திருகோணமலை நகரில் அரிசி விலையை அதிகரித்து விற்பனை செய்த இரு கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கடையில் சிவப்பு அரிசி 280 ஆகும் இன்னொரு கடையில் வெள்ளை பச்சை அரிசி 270 ஆகும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அவ்விரு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகக் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் தண்டப்பணம் விதிக்க நேரிடலாம் என நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்