by smngrx01

மோட்டார் சைக்கிள்கள் திருடன் ​ஐஸூடன் கைது பல மோட்டார் சைக்கிள்கள் திருட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர், ஐஸ் போதைப்பொருளுடன்  களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு காவல் பிரிவின் பன்வில ஹேன வட்ட பகுதியில் களுத்துறை பிரிவு குற்ற புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள் குழு, சனிக்கிழமை (11) சோதனை நடத்தி,  ஒரு கிராம் 750 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த  ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது.

அவர் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அதன்படி, காலி, பேருவளை மற்றும் பொத்தல காவல் பிரிவுகளில் சந்தேக நபரால் திருடப்பட்ட 05 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்