யாழில். கஞ்சாவுடன் விசுவமடு வாசி கைது

by smngrx01

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கேரள கஞ்சாவுடன் விசுவமடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்து , சோதனையிட்ட போது , அவரது உடைமையில் இருந்து ஒரு கிலோ 345 கிராம் கேரள கஞ்சா   மீட்கப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார் , சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்