நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம் ! on Sunday, January 12, 2025
பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்தார்.
பெற்றுக்கொள்ளும் நெல் தொடர்பாக ஒரு தரவுத்தள அமைப்பை உருவாக்குவதும், நெல் இருப்புகளை மறைக்க முடியாத ஒரு திட்டத்தை உருவாக்குவதும் இதன் நோக்கம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்கும் நோக்கில் அரசு நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நெல் மற்றும் அரிசிக்கான உத்தரவாத விலையை ஒரே நேரத்தில் தீர்மானித்து வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.